Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு

சி.பி.ஏ. கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, உயர் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயி முருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். அதில், “போடியில் ஏலத் தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லூரி (சி.பி.ஏ. கல்லூரி) ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியானது மதுரை காமராஜர் பல்கலைக்கழக மானியக்குழுவின் 100 விழுக்காடு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவர்களுக்குப் பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டுச் செலவினங்களை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக் கோரி, தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

32 குளங்கள் எங்கே? – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குள்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கிவருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலத்தடி நீரின் அரணாக விளங்கும் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க வழக்கு…!!

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் எனக் கண்டறிந்து, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர், தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிதிராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க உத்தரவு…..!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு….. பதிலளியுங்க…..”ராபர்ட் பயாஸ் பரோல்”….. நீதிமன்றம் உத்தரவு …!!

ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயாஸ்_க்கு  30 நாட்கள் பரோல் கோரிய மனு மீது நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது   மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ”ஆயுள் தண்டனையை நிறுத்துங்க” பேரறிவாளன் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் ….!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயாஸ் 30 நாள் பரோல் கேட்டு மனு…!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது   மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக MP_க்களுக்கு சிக்கல்” உடனே பதிலளியுங்கள்.. நீதிமன்றம் கெடுபிடி…!!

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் , கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் , மதிமுக கட்சியின் கணேசமூர்த்தி மற்றும் ஐஜேகே கட்சி பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று 4 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் […]

Categories
மாநில செய்திகள்

”நளினிக்கு பரோல் மறுப்பு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி வேண்டாம்…”தலைமை நீதிபதிக்கு மனு”….திரண்ட 64 வழக்கறிஞர்கள்…!!

கிறிஸ்துவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என்று 64 வழக்கறிஞ்சர்கள் தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளனர். சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பாலியல் புகாரில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவர் தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை இரத்து செய்யமுடியாது என்று கூறியதோடு கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இதனால் பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கட்டாய மதமாற்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]

Categories

Tech |