சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் […]
