அண்ணன் தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டியார் பேட்டை பகுதியில் வினோத்குமார், சதீஷ்குமார் என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இதில் வினோத்குமாருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும் இருக்கின்றனர். மேலும் சதீஷ்குமாருக்கு ஒரு மனைவியும், 6 மாத குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வினோத்குமார் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மண்டித் தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவரது சகோதரர் சதீஸ்குமார் அதே பகுதியில் பழுதுபார்க்கும் […]
