விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சில துறைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி பகுதி நோக்கி […]
