பிஎச்டி (ph.D) படிப்பதற்கான புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் வரும் கல்வி ஆண்டு முதல் M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது. எனினும் இதற்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் ஏற்கனவே எம்.பில் படித்து கொண்டிருப்போருக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
