தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]
