இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பிரமாண்ட திருவிழாவான 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென் கொரிய மொழிப்படமான ‘பாராஸைட்’ திரைப்படம் வென்றது. இதன் மூலம் ஆங்கில மொழிப்படங்கள் அல்லாமல் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் வெல்லும் முதல் படம் […]
