தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]
