காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை மசூதி வீதி பகுதியில் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியான மோகனப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மோகன பிரியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி விநாயகர் கோவிலில் […]
