காதல் திருமண ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாதானம் கிராமத்தில் சிவசண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் குமரக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை 7 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சிவசண்முகம், விஜயலட்சுமியும் வீட்டை விட்டு கிளம்பி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவல்நிலையத்துக்கு […]
