காதலில் தோல்வியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பலமுறை அந்த பெண்ணிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் சம்மதிக்காததால் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கன்னங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
