குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]
