ரியல் எஸ்டேட் அதிபர் ரசாயன மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுமந்தை தெருவில் சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுலைமான் பழங்களை பழுக்க வைக்கும் ரசாயன மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
