ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி பாரம் தங்காமல் வயலில் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியில் ஆலத்தம்பாடி மெயின் ரோட்டில் சாலை அமைப்பதற்காக கரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு கரும்பிளியுறுக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் சாலையோரத்தில் இருந்த ரோடு உடைந்து லாரி வயலில் கவிழ்ந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளது. […]
