லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர். […]
