பாரம் தாங்காமல் லாரி கிணற்றுக்குள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேவாகவுண்டனூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்கடேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட 10 டன் கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக பள்ளிபாளையம் அருகில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டனர். இந்த லாரியை பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]
