கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். […]
