ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]
