ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். […]
