உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]
