குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் […]
