இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக பணம் சம்பாதிப்பது, பணத்தை கடனாக பெறுவது, ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை போட்டு அதன் மூலம் அதிக பணத்தை ஈட்ட நினைப்பது உள்ளிட்ட குறுக்குவழி நடைமுறைகள் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் இது போன்ற நடைமுறைகள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அது பழக்கத்திற்கு வந்து அதிகரித்த பின் மக்களுக்கு பிரச்சனையாகவே இறுதியில் முடிந்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைனில் லோன் தருவதாக கூறி வரும் செயலிகளால் பலர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்ஸ்டன்ட் லோன் தருவதாக […]
