அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் […]
