இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள்தோறும் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிக அளவில் […]
