மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]