எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் […]
