காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் […]
