கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் லிபியாவில் மிசூராடா நகரில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐநா ஆதரவு பெற்ற அரசுப்படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி இராணுவ படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. ராணுவத் தளபதிகள் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar) தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. […]
