பட்டப்பகலில் சிறுத்தை புலி ஊருக்குள் உலா வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் தனியார் பங்களாவிற்கு செல்லும் நடைபாதையில் பட்டப்பகலில் சிறுத்தை புலி ஒன்று நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தங்களது செல்போனில் சிறுத்தை புலியை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டம் […]
