வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வெளியே வந்துள்ளது. இந்த சிறுத்தை பி.எஸ்.என்.எல் முன்பு இருக்கும் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டது. அப்போது சிறுத்தையை பார்த்து வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் குரைத்தது. இந்நிலையில் சிறுத்தை நாயை கொன்று கவ்வி இழுத்து செல்ல முயன்றுள்ளது. அப்போது கேட்டில் இருக்கும் கம்பியில் நாய் சிக்கி […]
