அழுகிய நிலையில் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்டோன்மோர் எஸ்டேட் 21-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி வனத்துறையின் மனித-வன விலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கால்நடை மருத்துவர் […]
