ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் . அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜ் என்பவருடைய வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார் . அதில் அரசு மணல் குவாரி ஒப்பந்தம் உள்ளதை மறைத்துவிட்டு […]
