காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]
