ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]
