தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி போன்ற […]
