இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 30, இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவிலுள்ள கவுரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் – 5 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட் – 30 செயற்கைக்கோள் தொலைதொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் […]
