இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]
