திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]
