விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய் பிகில் சம்பளமாக 30 கோடி […]
