பெண் துப்புரவு தொழிலாளி தனியாக இருந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மிஷனரி ஹில் பகுதியில் ராஜாமணி என்ற பெண் துப்புரவு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு 69 வயதாகியும் திருமணமாகாமல் தனது தம்பி குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் துப்புரவு தொழிலாளியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு துப்புரவு பணிக்கு சென்ற ராஜாமணி வகுப்பறைகளை சுத்தம் செய்துவிட்டு, […]
