வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடை குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் சரஸ்வதிக்கும் பாலகிருஷ்ணனின் சகோதரியான சின்ன தாய்க்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சின்ன தாய்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நீதிமன்ற ஊழியர்கள் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று வீட்டை […]
