காதல் தோல்வியினால் எலி பேஸ்ட்டை தின்று பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்து திருச்சி ஆயுதப்படை பிரிவில் தற்போது வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். […]
