குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் புதர்மண்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த எழிலரசி என்ற பெண் உடனடியாக குளத்துக்குள் குதித்து இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டார். தனது உயிரை […]
