தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசி துர்நாற்றம் வீசுவதோடு, தரமற்றதாக இருக்கிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து தரமற்ற அரிசியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலூர்-அழகர்கோவில் சாலையில் இருக்கும் கிடாரிபட்டி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து பெண்கள் […]
