வயதான தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடாமேடு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு நல்லமுத்து, பழனியம்மாள் என்ற 2 மகள்களும், மணி என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு பழனியம்மாளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 2 ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்து விட்டு பழனியம்மாள் தனது தாயுடன் வசித்து […]
