KYC விவரங்கள் குறித்து அடையாளம் தெரியாத யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் வைத்திருக்கும் நம் அனைவருக்குமே இப்போதெல்லாம் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி ஒரு வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் நம்மிடம் இருந்து வாங்கி நம்முடைய பணத்தை திருட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. இது குறித்து வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. […]
