குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் […]
