கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் புைகயிலை பாக்கெட்கள், பான்மசாலா மற்றும் குட்கா ஆகியவை 150 மூட்டைகளில் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். இதனை அடுத்து மினி லாரி ஓட்டுனரான கிஷ்கிந்தா ரோடு பகுதியில் வசிக்கும் முத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
