சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்து 15 மூட்டை குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் சாதிக்பாஷா நகர் அருகாமையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்து ஏற்பட்டு சாலையோரம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலி மீது மோதி […]
