சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெருங்குளத்தூரை சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]
